தமிழ்நாடு

நீரஜ் சோப்ராவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

DIN

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து முதல்வர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், 

உலகத் தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியராக வரலாறு படைத்து, இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்துள்ள ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்.

உங்களது அர்ப்பணிப்புணர்வும் இமாலய சாதனைகளும் உலக விளையாட்டு அரங்கில் இந்தியாவின் நிலையைத் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன என்று அவர் கூறினார்.

ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் ஈட்டி எறிதல் இறுதிச் சுற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் இந்தியாவின் நட்சத்திர வீரரும், ஒலிம்பிக் சாம்பியனுமான நீரஜ் சோப்ரா 88.17 மீ. தொலைவுக்கு எறிந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

50% குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை சுக்குநூறாக்கிய கால்பந்து வீரர்!

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

SCROLL FOR NEXT