தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி மின்வாரிய ஒப்பந்த ஊழியர் பலி!

அரக்கோணம் அருகே பணியின் போது மின்சாரம் தாக்கி மின்வாரிய ஒப்பந்த பணியாளர் உயிரிழந்தார். 

DIN

அரக்கோணம்: அரக்கோணம் அருகே பணியின் போது மின்சாரம் தாக்கி மின்வாரிய ஒப்பந்த பணியாளர் உயிரிழந்தார். 

அரக்கோணத்தை அடுத்த கீழ்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேக்கப் (52). தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அரக்கோணம் கிழக்குப் பகுதி அலுவலகத்தில் ஓப்பந்த பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

செவ்வாய்க்கிழமை அரக்கோணம் - காஞ்சிபுரம் ரயில்வே இருப்புப்பாதையில் பருத்திப்புத்தூர் ஊராட்சி வீராநாயுடு கண்டிகை அருகே தண்டவாளத்திற்கு ஓரு பக்கத்தில் இருந்து மறு பக்கத்திற்கு ஓயரை  எடுத்துச் செல்லும் பணியில் இருந்த போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே ஜேக்கப் உயிரிழந்தார். 

சாலை மறியல்:

இச்சம்பவத்தை தொடர்ந்து ஜேக்கப்பின் உடல் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது மருத்துவமனை வாயிலில் கூடிய ஜேக்கப்பின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கீழ்ப்பாக்கம் கிராம மக்கள் ஜேக்கப்பின் குடும்பத்திற்கு நிவாரணத்தொகை   கேட்டு மருத்துவமனை வாயிலில் அரக்கோணம் திருத்தணி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். சுமார் 2 மணி நேரமாக நடந்த இந்த மறியலால் அச்சாலையில் போக்குவரத்து பெரிதும் ஸதம்பித்தது. 

இதையடுத்து அங்கு வந்த உதவி கண்காப்பாளர் யாதவ்கிரிஷ் அசோக் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் மாலை 6.45 க்கு மேலும் மறியல் நீடிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பிரிட்டன், கனடா, ஆஸி. அறிவிப்பு!

இந்தியாவை பழிதீர்க்குமா பாகிஸ்தான்? முதலில் பேட்டிங்!

பட்டுப் பூவே... மிர்னாலினி ரவி!

தாதா சாகேப் பால்கே விருது: மலையாள சினிமாவுக்கு கிட்டிய கௌரவம் - மோகன்லால் நெகிழ்ச்சி!

காதல் மான்... ரித்திகா நாயக்!

SCROLL FOR NEXT