டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம்: விளக்கத்துடன் கோப்புகள் ஆளுநருக்கு அனுப்பி வைப்பு!
டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமிப்பதற்கான காரணங்களை விளக்கி தமிழக அரசு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கோப்புகளை அனுப்பியுள்ளது.
சென்னை: டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமிப்பதற்கான காரணங்களை விளக்கி தமிழக அரசு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கோப்புகளை அனுப்பியுள்ளது.
கடந்த ஜூன் 30 ஆம் தேதி ஓய்வு பெற்ற சைலேந்திர பாபுவை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமித்து தமிழக அரசு கோப்புகளை அனுப்பியது.
ஆளுநர் ஆர்.என். ரவி, டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை தமிழக அரசு பின்பற்றவில்லை என கோப்புகளை திருப்பி அனுபினார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | தமிழகத்தில் நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு: மக்கள் அதிருப்தி
இதோடுமட்டுமின்றி டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை குறித்து விவரங்களை அளிக்குமாறு தமிழக அரசிடம் கேட்டுள்ளார்.
நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளிப்படையாக விளம்பரம் செய்யப்பட்டதா? யார் யார் விண்ணப்பித்தார்கள்? என அரசுக்கு ஆளுநர் ரவி கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் பின்பற்ற நடைமுறைகள், டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமிப்பதற்கான காரணங்களை விளக்கி தமிழக அரசு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கோப்புகளை அனுப்பியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.