கோப்புப்படம் 
தமிழ்நாடு

நவம்பரில் மெட்ரோ ரயிலில் 80 லட்சம் பேர் பயணம்!

சென்னை மெட்ரோ ரயில்களில் நவம்பர் மாதத்தில் மட்டும் 80 லட்சம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

DIN

சென்னை மெட்ரோ ரயில்களில் நவம்பர் மாதத்தில் மட்டும் 80 லட்சம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில்களில் நடப்பு ஆண்டு செப்டம்பரில் 84,37,182 பயணிகள் பயணித்த நிலையில், அக்டோபரில் இதை விட 1.13 லட்சம் பயணிகள் அதிகமாக 85,50,030 போ் பயணித்து இருந்தனர்.

இந்நிலையில் நவம்பர் மாதத்தில் மட்டும் 80 லட்சம் பேர் பயணித்துள்ளனர். அதிகபட்சமாக நவ.10 ஆம் தேதி 3.35 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ‘க்யுஆா்’ குறியீடு, பயண அட்டைகள், மற்றும் இணையவழி பயணச்சீட்டுகளுக்கு 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.

மேலும் 83000 - 86000 என்ற எண்ணை பயன்படுத்து வாட்ஸ் - அப் மூலம் அல்லது இணைய பணப்பரிமாற்று செயலிகள் மூலம் பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT