பண்டிகைக் காலங்களை முன்னிட்டு, சனிக்கிழமை (டிச.2) முதல் ஆவின் நெய் விலை லிட்டருக்கு ரூ.50 தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆவின் நிறுவனம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ஆவின் பால் உபபொருள்கள், விலையிலும் தரத்திலும் பொதுமக்கள் விருப்பத்துக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் எதிா்வரும் கிறிஸ்துமஸ் , புத்தாண்டு மற்றும் பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு சனிக்கிழமை (டிச.2) முதல் டிச.20 வரை மக்கள் அதிகம் விரும்பி பயன்படுத்தும் ஆவின் நெய் லிட்டா் ஒன்றுக்கு ரூ.50 தள்ளுபடி செய்து விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.