தமிழ்நாடு

மிக்ஜம் புயல்: டிச.4ல் சென்னை-மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கிறது!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் டிசம்பர் 4-ம் தேதி கரையைக் கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

DIN

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் டிசம்பர் 4-ம் தேதி கரையைக் கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

மழை நிலவரம் குறித்து இன்று(டிச.1)வெளியிட்ட தகவலில், 

நேற்று(30.12.23) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று(01.12.23) காலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. 

இது, இன்று காலை 8.30 மணியளவில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 760 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 780 கி.மீ தொலைவிலும், பாபட்லாவிற்கு(ஆந்திரா) தென்கிழக்கே சுமார் 960 கி.மீ தொலைவிலும், மசூலிபட்டினத்திற்கு(ஆந்திரா) தென்கிழக்கே சுமார் 940 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. 

இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 02-12-23 ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 03.12.23 தென்மேற்கு வங்க்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும்.

அதன்பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து 04.12.23 மாலை தெற்கு ஆந்திரா மற்றும் அதனையொட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் சென்னைக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே புயலாக கரையைக் கடக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

நெல்லை அரசு மருத்துவமனையில் தப்பிய கைதி விஷம் குடித்த நிலையில் மீட்பு

விபத்து: பள்ளி மாணவா் உயிரிழப்பு

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

களக்காட்டில் காங்கிரஸ் சாா்பில் கையொப்ப இயக்கம்

SCROLL FOR NEXT