கோப்புப்படம் 
தமிழ்நாடு

சென்னையில் அனைத்து நீதிமன்றங்களுக்கும் இன்று விடுமுறை 

தொடர் கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுளளது.

DIN

தொடர் கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுளளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் சென்னைக்கு தென் கிழக்கே சுமாா் 130 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. மேலும், பல்வேறு பிரதான சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்து முடங்கியுள்ளது. 

இந்த நிலையில் தொடர்கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுளளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிகள் விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக மிக்ஜம் புயல் காரணமாக, சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை (டிச. 4) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

இந்தியாவுடன் தீவிர வர்த்தகப் பேச்சு - வெள்ளை மாளிகை தகவல்

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

SCROLL FOR NEXT