மழை குறைந்தது: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் தொடங்கியது!
சென்னையில் தற்போது மழை குறைந்ததை அடுத்து பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட கீழ்கண்ட பகுதிகளில் தற்போது மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை: மிக்ஜம் புயல் கனமழை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின் விநியோகம் சென்னையில் தற்போது மழை குறைந்ததை அடுத்து சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட கீழ்கண்ட பகுதிகளில் தற்போது மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.
மின் நிலையங்களில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் மரங்கள் விழுந்துள்ளதால், மின்சாரத்தை கவனத்துடன் கையாள வேண்டியுள்ளது. சென்னையில் பெய்து வரும் அதிகனமழையால் பாதுகாப்பு கருதியே மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.மின்சாரம் வழங்குவதில் எந்த பிரச்னையும் இல்லை. மழை நின்றவுடன் 2 மணி நேரத்துக்குள் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும், மின் வாரிய தலைமை அலுவலகம் 24 மணி நேரமும் போா்க்கால அடிப்படையில் இயங்கும், சென்னையில் மழை நின்றவுடன் 2 மணி நேரத்தில் மின்சாரம் வழங்கப்படும் என அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
இந்த நிலையில், சென்னையில் தற்போது மழை குறைந்ததை அடுத்து பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட கீழ்கண்ட பகுதிகளில் தற்போது மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ள பகுதிகள் விவரம்:
சென்னை மேற்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட ஜெ.ஜெ.நகர், சாந்தி காலனி, அண்ணா நகர், சேத்துப்பட்டு ,எஸ்ஏஎப் கேம்ஸ் வில்லேஜ், ஸ்பார்ட்டன் நகர், கலெக்டர் நகர், குமரன் நகர், மூர்த்தி நகர், சர்ச் சாலை, அடையாளம்பட்டு, பொன்னியம்மன் நகர் மற்றும் சென்னை மத்திய மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட அண்ணா சாலை, கிரிம்ஸ் ரோடு, நுங்கம்பாக்கம், ஸ்பென்சர் பிளாசா, பூக்கடை, சிந்தாதிரிப்பேட்டை, லஸ், இராயப்பேட்டை, மேற்கு மாம்பலம் மற்றும் தலைமைச் செயலகம் ஆகிய பகுதிகள், சென்னை வடக்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட சிஎம்பிடிடி, ஐசிஎப், இந்தியா பிஸ்டன், கீழ்பாக்கம்,
மணலி, நியூகொளத்தூர், பேப்பர்மில்ஸ் ரோடு, பெரியார் நகர் ஆகிய பகுதிகள்,
சென்னை தெற்கு - I மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட ஆழ்வார் திருநகரின் ஒரு பகுதி, கிண்டி, இராமாபுரம், இராமசாமி சாலை, செயின்ட் தாமஸ் மவுண்ட், வடபழனி, கெருகம்பாக்கம், போரூர் ஒரு பகுதி மற்றும் சென்னை தெற்கு - II மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர், அடையாறு, வேளச்சேரி,திருவான்மியூர், தொட்டியம்பாக்கம், கடப்பேரி ஆகியவற்றின் ஒரு பகுதிகளில் தற்போது மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.