தமிழ்நாடு

நாளையும் இலவசமாக ஆவின் பால் விநியோகம்: தலைமைச் செயலாளர்

மிக்ஜம் புயலினால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளப் பகுதிகளில் நாளையும் இலவசமாக ஆவின் பால் தரப்படும் என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

DIN

மிக்ஜம் புயலினால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளப் பகுதிகளில் நாளையும் இலவசமாக ஆவின் பால் தரப்படும் என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான மிக்ஜம் புயலினால் சென்னை கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. இரண்டு நாள்களாக தொடர்ந்து புயல் காற்றுடன் நீடித்த கனமழை நேற்று நள்ளிரவு முதல் படிப்படியாக குறையத் தொடங்கியது. மழை குறைந்ததால் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றும் பணிகளில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் நாளையும் ஆவின் பால் இலவசமாக தரப்படும் என தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

மழைநீர் தேங்கிய பகுதிகளில் மக்களை மீட்பதற்கான பணியில் அதிகளவில் மீனவர்களின் படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

சூர்ய நிலவு... ரகுல் ப்ரீத் சிங்!

ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த தமிழன்..! 20 போட்டிகளில் சாதித்த வருண் சக்கரவர்த்தி!

SCROLL FOR NEXT