ஆவின் நிலையத்தில் பால் வாங்க 200 மீட்டர் வரை வரிசையில் நிற்கும் மக்கள். 
தமிழ்நாடு

பால் வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் வாங்குவதற்காக மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.  

DIN

சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் வாங்குவதற்காக மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.  

பால் இல்லாமல் இரு நாட்களாக அவதிப்படும் சூழல் உள்ளதால், மழை குறைந்துள்ள இன்று அதிக எண்ணிக்கையிலான மக்கள் பால் வாங்கக் குவிந்தனர்.

சென்னை கொளத்தூர் அண்ணா சாலையில் ஆவின் பால் வாங்க  அப்பகுதி மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். 

வங்கக் கடலில் உருவான மிக்ஜம் புயலால் தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.

பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல கடைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அத்தியாவசிய பொருள்கள் கிடைக்காமல் மக்கள் அவதியுற்றனர். 

பால் வாங்க வரிசையில் காத்திருக்கும் மக்கள்

தற்போது சென்னையில் மழையளவு குறைந்துள்ளதால், அத்தியாவசிய பொருள்கள் வாங்கக் கடைகளில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் குவிந்துள்ளனர். 

குறிப்பாக ஆவின் நிலையங்களில் பால் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்து பால் வாங்கிச் சென்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT