தமிழ்நாடு

மீண்டும் அடுத்த புயலா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வதென்ன?

அடுத்த வாரம் மீண்டும் புதிய புயல் உருவாகவிருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வரும் நிலையில், மக்கள் அச்சப்பட வேண்டாம் என தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் கொடுத்துள்ளார்.

DIN


சென்னை: அடுத்த வாரம் மீண்டும் புதிய புயல் உருவாகவிருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வரும் நிலையில், மக்கள் அச்சப்பட வேண்டாம் என தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் கொடுத்துள்ளார்.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி, சென்னை மற்றும் ஆந்திரத்தைப் புரட்டிப்போட்ட மிக்ஜம் புயலின் பாதிப்பிலிருந்து இன்னும் மீளாத நிலையில், அடுத்த வாரம் மீண்டும் ஒரு புயல் உருவாகவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகிவருகின்றன.

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்பதாவது, சென்னைக்கு அடுத்த புயல் வரவிருப்பதாக வரும் தகவல்கள் அடிப்படையற்றது. இதுபோனற் புரளிகளை தயவுகூர்ந்து நம்ப வேண்டாம். அரபிக் கடலில், டிசம்பர் 10ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகலாம். ஆனால் அது இந்தியப் பெருங்கடல் நோக்கி நகர்ந்துவிடும். அதனால் சென்னைக்கு எந்த ஆபத்தும் நேரிடாது என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், சென்னைக்கு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2099 மி.மீ. மழை மழை பெய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, மிக்ஜம் பயுல் தொடர்பாக சமூக வலைதளத்தில் (எக்ஸ்) பதிவிட்டிருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர், திரு. வி.க.நகர் மற்றும் எழும்பூர் தொகுதிகளில் பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டேன்.

வெள்ளநீர் தேங்கியிருக்கும் நிலையில், மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், உயிரிழப்புகளைத் தடுக்கவும்தான் சில இடங்களில் மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை. மின் இணைப்புகள் வழங்கும் பணிகள் கவனத்தோடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அமைச்சர்கள், அதிகாரிகள் முதல் கடைநிலைப் பணியாளர்கள் வரை மக்களைப் பாதுகாக்கக் களத்தில் ஓய்வின்றி உழைத்து வருகிறார்கள். விரைவில் நிலைமை சீரடையும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அங்கன்வாடி பணியாளா் வீட்டில் 3 சவரன் நகை, ரொக்கம் திருட்டு

கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

வாழ்க்கைதான் யோசிக்கவே முடியாத சினிமா!

சட்ட விரோதமாக குட்கா விற்ற 9 கடைகளுக்கு ‘சீல்’

தீயில் கருகிய காா்: உயிா் தப்பிய 3 போ்

SCROLL FOR NEXT