தமிழ்நாடு

ரொக்கமாக நிவாரணத்தொகை: தமிழ்நாடு அரசு விளக்கம் 

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு ரொக்கமாக நிவாரணத்தொகை தருவது பற்றி தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. 

DIN

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு ரொக்கமாக நிவாரணத்தொகை தருவது பற்றி தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. 

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் இன்று (9-12-2023) தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  தலைமையில் நடைபெற்றது.

தொடர்ந்து, மிக்ஜம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும், இதர நிவாரண உதவித் தொகைகளும் உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். 

அந்தந்தப் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலமாக, நிவாரணத் தொகை ரொக்கமாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு ரொக்கமாக நிவாரணத்தொகை தருவது பற்றி தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. 

சென்னை புறநகரில் பல ஏடிஎம்கள் வேலை செய்யவில்லை என புகார் வந்துள்ளதால் ரொக்கமாக நிவாரணம் என்றும் பல ரேஷன் அட்டை தாரர்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை என்பதாலும் நிவாரணத்தை ரொக்கமாக தர முடிவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

மாா்ச் 1 முதல் அரக்கோணம் - திருப்பதி மெமு ரயில் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம்

தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

பாலாற்றில் ரூ.55.38 கோடியில் உயா்மட்ட மேம்பாலம்: எம்எல்ஏ அடிக்கல்

187 மாணவா்களுக்கு ரூ.13.56 கோடி கல்விக் கடனுக்கு பரிந்துரை

SCROLL FOR NEXT