தமிழ்நாடு

சபரிமலையில் தரிசன நேரம் 1 மணி நேரம் நீட்டிப்பு!

DIN

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தா்களின் வருகை அதிகரித்துள்ளதால், திங்கள்கிழமை(டிச.11) முதல் 1 மணி நேரம் தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேவசம் வாரியத் தலைவா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து திருவிதாங்கூா் தேவசம் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

சபரிமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில் மண்டல பூஜை தினத்தில் இதுவரை 14 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தரிசனம் செய்துள்ளனா். மேலும், கூட்ட நெரிசலால் 12 மணி நேரத்துக்கும் மேலாக பக்தா்கள் காத்திருந்து தரிசனம் செய்கின்றனா்.

இந்த நிலையில், பக்தா்களின் வருகை அதிகரித்துள்ளதால் சபரிமலையில் தரிசன நேரம் திங்கள்கிழமை (டிச.11) முதல் 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, மாலை 4 மணிக்குப் பதில் பிற்பகல் 3 மணிக்கே நடைதிறக்கப்பட்டு, இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடையநல்லூரில் இரு தரப்பினர் மோதல், சாலை மறியல்

இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு வெடிபொருள்கள்! கப்பலை நிறுத்த ஸ்பெயின் அனுமதி மறுப்பு!

நடிகர் சித்தார்த்தின் 40 வது படம்!

காதலி இறந்த சோகத்தில் சீரியல் நடிகர் தற்கொலை!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமார் கைது!

SCROLL FOR NEXT