முகப்பு
தமிழ்நாடு

டிச. 14ல் தேமுதிக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம்! விஜயகாந்த் கலந்துகொள்கிறார்!!

தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வருகிற டிச.14 ஆம் தேதி நடைபெறும் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:24 PM
தேமுதிக தலைவா் விஜயகாந்த்
பகிர்:

தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வருகிற டிச.14 ஆம் தேதி நடைபெறும் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது. 

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் வருகிற டிச. 14 ஆம் தேதி காலை 8.45 மணிக்கு சென்னை திருவேற்காட்டில் உள்ள ஜிபிஎன் பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. 

இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்கிறார். மேலும் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், கழகத்தின் ஆக்கப் பணிகள் குறித்தும், எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் கலந்து ஆலோசித்து சிறப்புரை ஆற்றவுள்ளதாக தேமுதிக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், கழக உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், தேர்தல் பணி குழு செயலாளர்கள், கழக அணி செயலாளர்கள், கழக அணி துணை செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள். ஒன்றிய கழக செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், பேரூராட்சி கழக செயலாளர்கள், புதுச்சேரி, கர்நாடகம், கேரளம், ஆந்திரம், மகாராஷ்டிரம், தில்லி, அந்தமான் ஆகிய மாநில செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

முன்னதாக, தீவிர இருமல், காய்ச்சல், சளி பாதிப்பு காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த நவ.18 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், பூரண குணமடைந்து இன்று (டிச.11) வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →