பூந்தமல்லியில் உள்ள 3 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பூந்தமல்லியில் உள்ள சரோஜினி வரதப்பன் மகளிர் மற்றும் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, சின்ன போரூரில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த 3 பள்ளிகளில் வெள்ள நீர் வடிந்து வரும் நிலையில் இன்று(டிச. 12) தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதையும் படிக்க: தண்டவாளத்தில் விரிசல்: மின்சார ரயில்கள் தாமதம்
மிக்ஜம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசால் பள்ளிகளுக்கு 4.12.2023 முதல் 9.12.2023 வரை விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.