தமிழ்நாடு

அவிநாசி: சிறு,குறு தொழில்களுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி பாஜக ஆர்ப்பாட்டம்

சிறு,குறு தொழில்களுக்கான மின் கட்டண உயர்வை முழுவதும் ரத்து செய்யக்கோரி பாஜக நெசவாளர் பிரிவினர் அவிநாசியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

DIN

அவிநாசி: சிறு,குறு தொழில்களுக்கான மின் கட்டண உயர்வை முழுவதும் ரத்து செய்யக்கோரி பாஜக நெசவாளர் பிரிவினர் அவிநாசியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கைத்தறி, விசைத்தறி, நூற்பாலை, ஜவுளித் துறை சார்ந்த சிறு குறு தொழில்களுக்கு உயர்த்தியுள்ள மின் கட்டணத்தை முழுவதும் ரத்து செய்ய வேண்டும். விலையில்லா வேட்டி, சேலை உற்பத்தி செய்வதில் உள்ள முறைகேடுகளையும், கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் போலி உறுப்பினர் சேர்க்கையை கண்டித்தும் அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை பாஜக நெசவாளர் பிரிவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பாஜக நெசவாளர் பிரிவினர்

ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக நெசவாளர் பிரிவு மாநிலத் தலைவர் கே. எஸ். பாலமுருகன் தலைமை வகித்தார்.நெசவாளர் பிரிவு மாநில  பொதுச்செயலாளர் ஏ.பி. முருகானந்தம், திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், நீலகிரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர்கள், சார்பு அணியினர் உள்ளிட்ட பாஜகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

முதல்வர் ஸ்டாலின், உதயநிதியின் தொகுதிகளில் 1.93 லட்சம் வாக்குகள் நீக்கம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கைக்கான படிவம் 6-ம் ஆவணங்களும்!

SCROLL FOR NEXT