கோப்புப்படம் 
தமிழ்நாடு

புயல் நிவாரணம்: இன்று முதல் டோக்கன் விநியோகம்; டிச. 17ல் முதல்வர் தொடக்கிவைக்கிறார்?

மிக்ஜம் புயல் நிவாரணத் தொகைக்கு இன்று பிற்பகல் முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

DIN

மிக்ஜம் புயல் நிவாரணத் தொகைக்கு இன்று(வியாழக்கிழமை) பிற்பகல் முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தமிழகத்தில் டிசம்பர் 3, 4 ஆம் தேதிகளில் மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், மிக்ஜம் புயல் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகையாக ரூ.6 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இதுகுறித்த அரசாணை நேற்று(புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகைக்கு இன்று(வியாழக்கிழமை) பிற்பகல் முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நிவாரணம் வழக்குவது குறித்து ரேஷன் கடை பணியாளர்களுக்கான பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகவும் இதன் பின்னர் இன்று பிற்பகல் முதல் டோக்கன் விநியோகம் செய்யும் பணியில் கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை பணியாளர்கள் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் வருகிற டிசம்பர் 17 ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) முதல்வர் மு.க. ஸ்டாலின் நிவாரணத் தொகை வழங்குவதை தொடக்கிவைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழித்துறையில் நாளை மின்தடை

தக்கலை அருகே ஓடையில் முதியவா் சடலம் மீட்பு

500 மீனவ பெண்களுக்கு இலவச மீன் விற்பனை பாத்திரம் அளிப்பு

வார இறுதி: 1,040 சிறப்பு பேருந்துகள்

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை

SCROLL FOR NEXT