கீழ்பவானி கால்வாய் கான்கிரீட் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் பேரணி 
தமிழ்நாடு

கீழ்பவானி கால்வாய் கான்கிரீட் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் பேரணி

கீழ்பவானி பிரதான கால்வாயை சிமென்ட் தளம்(கான்கிரீட்) அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரோட்டில் பல்வேறு விவசாய சங்கத்தினர் பேரணி நடத்தினர்.

DIN

ஈரோடு: கீழ்பவானி பிரதான கால்வாயை சிமென்ட் தளம்(கான்கிரீட்) அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரோட்டில் பல்வேறு விவசாய சங்கத்தினர் பேரணி நடத்தினர். கீழ்பவானி கால்வாய் கான்கிரீட் திட்டம் சம்பந்தமான அரசு ஆணையை ரத்து செய்யுமாறு வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அவர்கள் கூறியதாவது: 

இந்த திட்டத்தால் பல கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்றும், நிலத்தடி நீர் தடைபடும் என்றும், பாசனத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். 

மூன்று மாவட்டங்களில் உள்ள கீழ்பவானி கால்வாய் மற்றும் 34 திட்டங்களின் கசிவு நீரை நம்பியிருக்கும் நிலங்கள் பாதிக்கப்படும்.கால்வாயின் மேற்பரப்பை கான்க்ரீட் செய்யும் எந்தவொரு திட்டத்தையும் அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும்.கால்வாயின் பலவீனமான பகுதிகளில் மட்டுமே பழுதுபார்க்கும் பணிகளைத் தொடங்க வேண்டும்.

பேரணியில் கலந்துகொண்ட பல்வேறு விவசாய சங்கத்தினர்.

கால்வாயின் ஓரங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு வெட்டப்பட்டு சுற்றுச்சூழல் பிரச்னைக்கு இந்த திட்டம் வழிவகுக்கும் என்பதால், கான்கிரீட் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். இந்த திட்டத்தை விவசாயிகள் கோரவில்லை. 

தற்போதுள்ள மண் அணை மற்றும் கால்வாயை பலப்படுத்த வேண்டும், அவைகள் ஏற்கனவே பலமாக உள்ளன. இந்த விவகாரத்தில் விவசாயிகளிடம்
ஆலோசனை நடத்துவதாக முதல்வரின் தேர்தல் வாக்குறுதியை அவர்கள் நினைவூட்டினர்.ஆனால் அது செய்யப்படவில்லை.கால்வாய் மற்றும் பவானிசாகர் அணையை தூர்வாரலாம். 

பாஜக விவசாயிகள் அணி மாநிலத் தலைவர் ஜி.கே.நாகராஜ்,கேஎம்டிகே பொதுச் செயலாளரும் எம்எல்ஏவுமான ஈஸ்வரன்,பேரணியில் கீழ்பவானி விவசாயிகள் சங்கத் தலைவர் ரவி, சிறு, குறு விவசாயிகள் சங்கத் தலைவர் சுதந்தரராசு,சங்கத் தலைவர் சண்முகம்,பாசம் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். பின்னர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

SCROLL FOR NEXT