தமிழ்நாடு

டிச.19ஆம் தேதி தில்லி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்தியா கூட்டணியின் 4வது ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் வரும் 19ஆம் தேதி தில்லி செல்லவுள்ளார்.

DIN

இந்தியா கூட்டணியின் 4வது ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் வரும் 19ஆம் தேதி தில்லி செல்லவுள்ளார்.

2024 மக்களவைத் தோ்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட பிரதான எதிா்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் ‘இந்தியா’ கூட்டணியின் முதல் மூன்று ஆலோசனைக் கூட்டங்கள் முறையே பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் நடைபெற்றன. 

இதனிடையே ‘இந்தியா’ கூட்டணி தலைவா்களின் 4-ஆவது கூட்டம் தில்லியில் டிசம்பா் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் டிச.19ஆம் தேதி காலை தில்லி செல்லவுள்ளார். முன்னதாக 'இந்தியா' கூட்டணி கட்சிகளின் நான்காவது கூட்டம் மத்தியப் பிரதேச தலைநகா் போபாலில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. 

ஆனால் கூட்டணி கட்சிகளின் முக்கியத் தலைவர்களான மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், நிதிஷ் குமார், அகிலேஷ் யாதவ் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்க முடியாத சூழல் நிலவியதால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாய் கிரிசில்டாவின் மிரட்டலின் பேரில் திருமணம் நடந்தது! - மாதம்பட்டி ரங்கராஜ்

பறவைகளில் அவள் மணிப்புறா... கீர்த்தி ஷெட்டி!

ஓசையின்றிப் பூ பூக்கும்... ராஷி கன்னா!

கடலோரம்... ரகுல் பிரீத் சிங்!

சமாளிப்புகளைவிட ஆடையின் விலை அதிகம்... யாஷிகா ஆனந்த்!

SCROLL FOR NEXT