முகப்பு
தமிழ்நாடு

4 மாவட்டங்களில் டிச.17ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை(டிச.17) ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 15 டிசம்பர், 2023 at 10:35 PM
கோப்புப் படம்.
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:56 PM

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நியாயவிலைக் கடைகள் ஞாயிற்றுக்கிழமை (டிச.17) செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையா் ஹா் சஹாய் மீனா வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவு:

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மிக்ஜம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதன்பேரில் வெள்ளம் நிவாரணத் தொகைக்கான டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணியை மேற்கொள்வதற்காக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் ஞாயிற்றுக்கிழமை (டிச.17) நியாய விலைக் கடைகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.