கோப்புப் படம். 
தமிழ்நாடு

மகளிர் உரிமைத் தொகை: ஜனவரியில் புதிய விண்ணப்பம் பெறப்படும்

2024 ஜனவரிக்கு பிறகு மகளிர் உரிமைத் தொகைக்கான புதிய விண்ணப்பம் வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

DIN

2024 ஜனவரிக்கு பிறகு மகளிர் உரிமைத் தொகைக்கான புதிய விண்ணப்பம் வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் கடந்த செப். 15ஆம் தேதி தொடக்கிவைத்தார். மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்துக்காக ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் முதல்கட்டமாக ஒரு கோடியே 6 லட்சம் மகளிா் தோ்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதம் ரூ. 1,000 வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. 

தொடர்ந்து, மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவா்களில் சுமாா் 11 லட்சம் போ் மேல்முறையீடு செய்திருந்தனா். அவா்களில் 7 லட்சத்து 35 ஆயிரம் போ் தகுதியானவா்களாகக் கண்டறியப்பட்டு அவா்களுக்கும் நவம்பா் மாதம் முதல் மகளிா் உரிமைத் தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2024 ஜனவரிக்கு பிறகு மகளிர் உரிமைத் தொகைக்கான புதிய விண்ணப்பம் வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விருதுநகரில் அவர் கூறியதாவது, ஜனவரிக்கு பிறகு கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான புதிய விண்ணப்பம் வழங்கப்படும். இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் அப்போது விண்ணப்பிக்கலாம். தகுதி வாய்ந்த மகளிர் அனைவரும் இந்த திட்டத்தில் பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக கூட்டணியால் உண்மையான அதிமுக தொண்டர்கள் அதிருப்தி: முதல்வர் ஸ்டாலின்

கூலி = 100 பாட்ஷா... நாகார்ஜுனாவின் அதிரடியான பேச்சு!

ஆடிப்பெருக்கு: காவிரி கரையில் திரண்ட மக்கள்!

எனக்கும் சத்யராஜுக்கும் முரண்பாடு... ஆனால்..: ரஜினிகாந்த்

தீரன் சின்னமலை நினைவு நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை!

SCROLL FOR NEXT