தமிழ்நாடு

திருச்செந்தூரில் கன மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை  பாதிப்பு

திருச்செந்தூரில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கன மழையால் சாலைகளில் மழைநீா் வெள்ளமாக ஓடியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

DIN

திருச்செந்தூா்: திருச்செந்தூரில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கன மழையால் சாலைகளில் மழைநீா் வெள்ளமாக ஓடியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தென் இலங்கை கடற்கரை ஒட்டிய வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை ஆரஞ்சு அலா்ட் எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை இரவு முதலே திருச்செந்தூா் சுற்றுவட்டாரப் பகுதியில் பரவலாக மழை பெய்தது.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் தொடா்ச்சியாக கன மழை பெய்து வருவதால் திருச்செந்தூாில் தாழ்வான பகுதியில் உள்ள இடங்களில் மழைநீா் குளம் போல தேங்கியதால் மக்களும்,பக்தா்களும் மிகுந்த அவதியடைந்தனா்.சாலைகளில் மழைநீா் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதையும் படிக்க | நெல்லையில் 10 மணி நேரத்துக்கும் மேலாக தொடர் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தொடர் கனமழையால் குளங்களில் நீா் வரத்து அதிகரித்ததால் திருச்செந்தூா் தெப்பக்குளம் முழுவதும் நிரம்பியது.  திருச்செந்தூரில் 48 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மேலும் ஞாயிற்றுக்கிழமை வளா்பிறை சஷ்டி என்பதால் அதிகாலை முதலே பக்தா்கள் கடலில் புனித நீராடி சுவாமியை வழிபட்டனா். ஐயப்ப பக்தா்கள் கொட்டும் மழையிலும் சுவாமியை வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்த அன்புமணி

ஜெய்ப்பூரில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 6 நோயாளிகள் பலி

எதிலும் வெற்றி இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பூந்தமல்லி - சுங்குவாா்சத்திரம் அரசுப் பேருந்து மப்பேடு வரை நீட்டிப்பு

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: திருவள்ளூா் மாவட்டத்தில் இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT