தமிழ்நாடு

குடும்ப அட்டை இல்லாதவர்களும் நிவாரணத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

புயல் வெள்ள நிவாரணத் தொகை பெறுவதற்கு டோக்கன் கிடைக்கப் பெறாத குடும்ப அட்டை இல்லாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

DIN


சென்னை: புயல் வெள்ள நிவாரணத் தொகை பெறுவதற்கு டோக்கன் கிடைக்கப் பெறாத குடும்ப அட்டை இல்லாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

மிக்ஜம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த 37 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

இதனைத் தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் டோக்கன்கள் பெற்ற அனைவருக்கும் நிவாரணத் தொகை வழங்கும் பணி தொடங்கியது. 

குடும்ப அட்டை இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்
புயல் வெள்ள நிவாரணத் தொகை பெறுவதற்கு டோக்கன் கிடைக்கப் பெறாத குடும்ப அட்டை இல்லாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரும் நியாயவிலைக் கடைகளில் உரிய படிவத்தை பெற்று நிவாரணத் தொகை பெற விண்ணப்பிக்கலாம். 

நியாவிலைக் கடைகளில் முற்பகல் 9 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரையும் நிவாரணத் தொகை மற்றும் படிவும் வழங்கப்படும். 

கட்டுப்பாட்டு அறை
மிக்ஜம் புயல் நிவாரணம் குறித்த பொதுமக்களுக்கு சந்தேகங்களை தீர்க்க சென்னை சேப்பக்கம் எழிலகத்தில் அமைந்துள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர், ஆணையாளர் அலுவகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் ஞாயிற்றுக்கிழமை (டிச.17) காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

பொதுமக்கள் நிவாரணத் தொகை குறித்த தங்களது சந்தேகங்களை 044-2859 2828 மற்றும் 1100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் வாயிலாகவும் தொடர்பு கொண்டும் தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலைக் காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

SCROLL FOR NEXT