தமிழ்நாடு

கனமழை: நெல்லை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

நெல்லையில் பெய்துவரும் கனமழை காரணமாக நெல்லை - தூத்துக்குடி இடையேயான தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

DIN

நெல்லையில் பெய்துவரும் கனமழை காரணமாக நெல்லை - தூத்துக்குடி இடையேயான தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

தென்மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் தொடர்ந்து அதி கனமழை பெய்து வருகிறது. வரலாறு காணாத மழையால் இந்த 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

நெல்லை மாநகரம் முழுவதும் வெள்ளை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. தாமிரவருணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட அறிவியல் மையம், திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.

நெல்லை சந்திப்பு பகுதியில் சிக்கி இருக்கும் பொது மக்களை படகுமூலம் மீட்புப் படையினர் மீட்டு வருகின்றனர்.

நெல்லை - தூத்துக்குடி இடையேயான தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், வசவப்புரம் பகுதியில் துண்டுக்கப்பட்ட நெடுஞ்சாலையை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி, குடியிருப்புப் பகுதியில் திரியும் குரங்குகளை அப்புறப்படுத்தக் கோரிக்கை

கந்தா்வகோட்டையில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்

விராலிமலையில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடக்கம்

நவ.17-இல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவா் பணிக்கான நோ்காணல்

சந்திரமெளலீஸ்வரா் கோயில் குடமுழுக்கு

SCROLL FOR NEXT