தமிழ்நாடு

அடுத்த 24 மணி நேரத்திற்கு அதி கனமழை தொடரும்: பாலச்சந்திரன்

DIN

தென் மாவட்டங்களில் பெய்துவரும் அதி கனமழை அடுத்த 24 மணி நேரத்திற்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையத் தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் வெளியிட்ட தகவலில், 

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நீடிப்பதால் கனமழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்துக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அதிகனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக 4 மாவட்டங்களும் கிட்டத்தட்ட வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

இந்த நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு அதிகனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனத்தை ஈர்க்கும் விக்ரமின் 'வீர தீர சூரன்’ போஸ்டர்!

மோடியுடன் நேருக்கு நேர் விவாதம்: ராகுல் காந்தி சம்மதம்!

வயது முதிர்ந்த போதிலும்... எம்.எஸ்.தோனிக்காக சிஎஸ்கேவின் தரமான பதிவு!

7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

ஈடன் கார்டன்ஸில் மழை; போட்டி நடைபெறுமா?

SCROLL FOR NEXT