தமிழ்நாடு

மதுரையில் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு 

DIN

மதுரையில் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

குமரிக் கடல், அதையொட்டிய பகுதியில் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் கனமழை பெய்கிறது. 

தொடா் கனமழை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.

இதனிடையே மதுரையில் பரவலாக பெய்த மழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வைகை ஆற்றை ஒட்டிய சாலைகளில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

வைகை ஆற்றின் கரையோரங்களில் வசிப்போர் ஆற்றில் குளிக்கவோ, கடக்கவோ கூடாது என ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டிருந்தும் குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தில் நாளை வாக்குப்பதிவு: எல்லை சோதனைச் சாவடிகளில் வாகன சோதனை தீவிரம்

பாஜக இல்லாத பாரதம்: தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி

பாகிஸ்தான்: சவூதி பட்டத்து இளவரசா் வருகை திடீா் ஒத்திவைப்பு

மே 15 வரை 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT