தமிழ்நாடு

தென் மாவட்டங்களில் அதி கனமழைக்கு மேக வெடிப்பு காரணமல்ல! 

தென் மாவட்டங்களில் பெய்த அதி கன மழைக்கு மேக வெடிப்பு காரணமில்லை என வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். 

DIN

தென் மாவட்டங்களில் பெய்த அதி கன மழைக்கு மேக வெடிப்பு காரணமில்லை என வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். 

மழை நிலவரம் குறித்து மேலும் அவர் கூறுகையில், 

தென்காசியில் 60 சதவீதம், துத்துக்குடியில் 80 சதவீதமும் மழை பெய்துள்ளது. இது இயல்பை விட கூடுதலாக பதிவாகியுள்ளது. தென் மாவட்டங்களில் இயல்பை விட கூடுதல் மழைக்கு காரணம் மேக வெப்பு அல்ல அதிக கனமழை தான் பெய்துள்ளது. 

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று(18.12.23) தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கன முதல் மிகக் கனமழையும் ஓரிரு இடங்களில் அதிக கனமழையும், விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள் திண்டுக்கல், நீலகிரி, மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 

நாளை(19.12.23) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டஙகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகிளில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். 

மீனவர்கள் டிச. 18, 19 ஆகிய தேதிகளில் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 5 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாள்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப் படுகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் என்ன வித்தியாசம்? ரசிகை ஆவேசம்

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

SCROLL FOR NEXT