FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

முழு வீச்சில் நடைபெறும் எண்ணெய் அகற்றும் பணி: சிபிசிஎல்

எதிர்பாராத வெள்ளம் காரணமாக எண்ணூர் முகத்துவார பகுதியில் கடலில் கலந்த எண்ணெய் கழிவுகளை நீக்கும் பணி குறித்து சிபிசிஎல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

6 பிப்ரவரி 2024, 6:58 pm IST
எண்ணூர் கழிமுகப் பகுதியில் கலந்த எண்ணெய் கழிவுப் படலம் | AP
பகிர்:

எண்ணூர் முகத்துவார பகுதியில் கடலில் கலந்த எண்ணெய் படலங்களை நீக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சிபிசிஎல்) தெரிவித்துள்ளது.

சிபிசிஎல் வெளியிட்டுள்ள அறிக்கையில், எண்ணெய் அகற்றும் பணியில் 240-க்கும் அதிகமான தேர்ச்சிப் பெற்ற நபர்கள், 125 படகுகள், நீரில் இருந்து எண்ணெய் நீக்கும் கருவிகள், உபகரணங்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், 1500 மீட்டர் பரப்பளவுக்குத் தடுப்பு வளையங்கள், எண்ணெய் படலம் நீர்ப்பரப்பில் அதிகளவுக்கு பரவாமல் இருக்க எட்டு வெவ்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. 

Advertisement

Advertisement

எண்ணெய் நீக்கும் கருவிகள் ஆறு பயன்பாட்டில் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிபாராத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆலையில் தேங்கி இருந்த எண்ணெய்க் கழிவுகள் கால்வாயில் வெளியேறி இருக்கலாம் என சிபிசிஎல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments