கோப்புப் படம் 
தமிழ்நாடு

தென்மாவட்ட ரயில் சேவைகளில் மாற்றம்!

வெள்ள பாதிப்பையொட்டி தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில் சேவைகளில் நாளை (டிச. 20) மாற்றங்களை செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

DIN

வெள்ள பாதிப்பையொட்டி தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில் சேவைகளில் நாளை (டிச. 20) மாற்றங்களை செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

நெல்லை - சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் இரு மார்க்கமாகவும் நாளை (டிச. 20) ரத்து செய்யப்பட்டுள்ளது. 

திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் விரைவு ரயில் நாளை கோவில்பட்டியில் இருந்து புறப்படும்.

நெல்லை - தாதர் விரைவு ரயில் நாளை மதுரையிலிருந்து புறப்படும்.

மதுரை - புனலூர் இடையிலான ரயில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலிருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச. 17) பெய்த தொடர் கனமழை காரணமாகவும், ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும் நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. 

குறிப்பாக நெல்லை மாநகரம், நெல்லை சந்திப்பு ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கியமான பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. 

இதனால், மறு அறிவிப்பு வரும் வரை நெல்லை ரயில் நிலையம் செயல்படாது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபு சோரன் உடல் சொந்த ஊரில் தகனம்: லட்சக்கணக்கானோர் அஞ்சலி!

பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!

ஆக. 21, மதுரையில் தவெக மாநாடு: விஜய்

அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியாவுக்கு கூடுதல் வரி: டிரம்ப்

ஏமாற்றமளித்தாலும் நியாயமான முடிவே கிடைத்துள்ளது: பென் ஸ்டோக்ஸ்

SCROLL FOR NEXT