கோப்புப்படம் 
தமிழ்நாடு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகமே நடத்த வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை மாவட்ட நிர்வாகமே நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

DIN

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை மாவட்ட நிர்வாகமே நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. முன்னதாக தென்கால் பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் இப்போட்டியை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த பல்வேறு தரப்பினர் மாவட்ட நிர்வாகத்தினரிடம் முறையிட்டனர். இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த,  உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, எந்தவிதமான சாதி, மதத்தை புகுத்தல் இல்லாமல் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும்.

மேலும், மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும்  மாநகராட்சி இணைந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT