தமிழ்நாடு

ஜன. 3 முதல் புத்தகக் காட்சி!

DIN

47 ஆவது சென்னை புத்தகக் காட்சி ஜன. 3ஆம் தேதிமுதல் தொடங்குகிறது. 

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஜன.3ம் தேதி மாலை 4.30 மணியளவில்  முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைக்கவுள்ளார். ஜன. 21 வரை புத்தகக் காட்சி நடைபெற உள்ளது.

துவக்கவிழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு கல்வி அமைச்சர்  அன்பில் மகேஸ் பொய்யாமொழி  கலந்து கொள்ளவுள்ளார். 

புத்தகக் காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல்  இரவு 8.30 மணி வரை நடைபெறும். வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். மொத்தம் 19 நாட்கள்  புத்தகக் காட்சி நடைபெறுகிறது.

ஒவ்வொரு நாள் மாலையிலும் சிந்தனை அரங்கில் தமிழகத்தின் தலை சிறந்த அறிஞர்கள், எழுத்தாளர்களின் உரைவீச்சுக்கள் நடைபெற உள்ளது .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானிகள் பற்றாக்குறை... ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் சேவை குறைப்பு

தென் சென்னை வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி பழுது!

அடுத்த 2 மணிநேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யும்!

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

SCROLL FOR NEXT