தமிழ்நாடு

கிறிஸ்துமஸ் பண்டிகை: சென்னையிலிருந்து 640 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

DIN

வார இறுதி நாள் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு பயணிகள் வசதிக்காக 640 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தினசரி இயங்கும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக டிச.22 ஆம் தேதி 350 பேருந்துகளும், டிச.23 ஆம் தேதி 290 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வார இறுதி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சென்னையிலிருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம், தூத்துக்குடி, வேளாங்கண்ணி உள்ளிட்ட ஊர்களுக்கும், மற்ற ஊர்களுக்கும் பயணம் மேற்கொள்ள சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மேலும், பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கேற்ப பேருந்துகளை ஏற்பாடு செய்திடவும், பேருந்து இயக்கத்தை மேற்பார்வை செய்திடவும் அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT