கோப்புப்படம் 
தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை 2024: குரூப் 4 எப்போது?

2024-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) வெளியிட்டுள்ளது.

DIN

2024-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி) தேர்வு செய்து வருகிறது.

நடப்பு ஆண்டில் அறிவிக்கப்படாமல் உள்ள குரூப் 1, குரூப் 4 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என அரசு தேர்வுக்காக தயாராகி வருபவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

இந்த நிலையில், 2024-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

அதன்படி, குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்தாண்டு ஜனவரியில் வெளியிடப்பட்டு ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படும் எனவும், குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்பட்டு ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

குரூப் - 1 தேர்வுக்கான அறிவிக்கை அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, ஜூலையில் தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரூ.62 லட்சம் அபராதம் விதிப்பு!

AVATAR - Fire and Ash - Review | உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? | James Cameron

அரசனில் இணைந்த டூரிஸ்ட் ஃபேமிலி நடிகை!

கடைசி டி20: திலக் வர்மா, பாண்டியா அதிரடியால் தென்னாப்பிரிக்காவுக்கு 232 ரன்கள் இலக்கு

SCROLL FOR NEXT