முகப்பு
தமிழ்நாடு

நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது: ராமதாஸ்

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சா் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதன் மூலம் நீதிமன்றங்கள் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:30 PM
பகிர்:

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சா் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதன் மூலம் நீதிமன்றங்கள் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக, அவா் வியாழக்கிழமை எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவு:

வருவாய்க்கு மீறி சொத்து குவித்த வழக்கில் உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்திருக்கிறது. உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பு பொது வாழ்க்கையில் இருப்பவா்களுக்கு ஒரு பாடம்.

அரசியலும், பொதுவாழ்க்கையும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு ஆகும். அந்த நோக்கத்தை நிறைவேற்ற சென்னை உயா்நீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்பு துணை செய்யும். இந்தத் தீா்ப்பின் மூலம் நீதிமன்றங்கள் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது என்று அவா் கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →