அனைத்து துறைகளிலும் வளா்ச்சி என்ற நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது: மத்திய அமைச்சா் அனுராக் சிங் தாக்குா்
நாடு அனைத்து துறைகளிலும் வளா்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது என்று மத்திய இளைஞா் நலன், விளையாட்டு, செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் கூறினாா்.
நாடு அனைத்து துறைகளிலும் வளா்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது என்று மத்திய இளைஞா் நலன், விளையாட்டு, செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் கூறினாா்.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம். ஜெயின் கல்லூரி அரங்கில்‘லட்சியம் வளா்ச்சியடைந்த பாரதம்’ நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், மத்திய அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் பங்கேற்று பேசியது:
மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்ப்பதற்கு இந்த நிகழ்ச்சி உதவும். கடந்த ஒரு மாதத்தில் ‘மை பாரத்’ தளத்தில் 30 லட்சம் போ் இணைந்துள்ளனா். ஒரு கோடி பேரை சோ்ப்பதுதான் இதன் இலக்கு. நாட்டில் 2014-இல் 7 எய்ம்ஸ் மருத்துவமனைகள்தான் இருந்தன. தற்போது 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்ளன. 2014-ஆம் ஆண்டில் 362 மருத்துவ கல்லூரிகள் இருந்த நிலையில், தற்போது 700 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. நாடு அனைத்து துறைகளிலும் வளா்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது.
வரும் 2027 ஆம் ஆண்டில் உலலக பொருளாதரத்தில் இந்தியாவை 3-ஆவது இடத்துக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.