தூத்துக்குடியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்ட தேசிய பேரிடர் மீட்புப் படை
வெள்ளம் சூழ்ந்திருக்கும் தூத்துக்குடியின் பல கிராமங்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் காவல்துறையின் உதவியுடன் படகுகள் மூலம் சென்று மீட்டுள்ளனர்.
தூத்துக்குடி: வெள்ளம் சூழ்ந்திருக்கும் தூத்துக்குடியின் பல கிராமங்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் காவல்துறையின் உதவியுடன் படகுகள் மூலம் சென்று மீட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் சிப்காட் தொழிற்பேட்டையில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் சிக்கி ஏராளமான மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வந்தனர். அவர்களுக்கு குடிநீர் மற்றும் உணவு கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகியிருந்தனர்.
இதையும் படிக்க.. கா்நாடகத்தில் இன்றுமுதல் ‘ஹிஜாப்’ அணிவதற்கான தடை நீக்கம்
Advertisement
இந்த நிலையில், சிப்காட் காவல்துறை உதவியுடன், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், படகுகள் மூலம் சென்று, வெள்ளத்தில் சிக்கித் தவித்து வந்த பெண்கள், குழந்தைகளுக்கு உணவளித்தனர். நிவாரணப் பொருள்களையும் படகுகள் மூலம் கொண்டு சென்று அளித்துள்ளனர்.
அந்தோணியாபுரத்தில் உள்ள வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகிறது. தமிழக அரசின் தலைமைச் செயலர் ஷிவ் தாஸ் மீனா, தூத்துக்குடி சென்று மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனை உள்பட பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர், ஏரல், அகரம், காயல்பட்டிணம் உள்ளிட்ட பகுதிகளில் இன்னமும் வெள்ளம் சூழ்ந்திருக்கும் நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளும் தொடங்கியிருக்கின்றன.