முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

ஜன. 2-ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

ரூ.951 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைக்க ஜனவரி 2 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:31 PM
கோப்புப்படம்
பகிர்:

ரூ.951 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைக்க ஜனவரி 2 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சி விமான புதிய முனையம், ஒரே நேரத்தில் சுமார் 2,900 பயணிகள் வந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 75 ஆயிரம் சதுர அடிப் பரப்பளவில் இந்த கட்டடம் கட்டடமைக்கப்பட்டுள்ளது.

48 பயணிகள் வருகை மையங்கள், 10 போர்டிங் பாலங்கள் என பல நவீன வசதிகளுடன், பயணிகளின் வருகையை விரைவாக்கவும், எளிமையாக்கவும் உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

கோயில் நகரமான திருச்சியின் இந்தப் புதிய முனையக் கட்டடத்திற்கான பணி கடந்த 2019, பிப்ரவரியில் திருப்பூரிலிருந்து காணொலி வழியாக பிரதமா் மோடி தொடங்கி வைத்திருந்தாா்.

புதிய ஒருங்கிணைந்த பயணிகள் முனையக் கட்டடம், விமானங்கள் நிற்கும் பகுதி, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரம், அதிகரித்து வரும் பயணிகள் போக்குவரத்தை கருத்தில் கொண்டு நெரிசலைக் குறைப்பதற்கான நவீன வசதிகள் ஆகியவை இந்த விரிவாக்கத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
முழு கட்டுரையைப் படிக்க →