கோப்புப்படம் 
தமிழ்நாடு

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி: அதிமுக பொதுக்குழு நாளை கூடுகிறது!

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் நாளை (டிச. 26) சென்னையில் நடைபெறுகிறது.

DIN

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் நாளை (டிச. 26) சென்னையில் நடைபெறுகிறது.

சென்னை அருகே உள்ள வானகரத்தில் நாளை காலை 10.35-க்கு அதிமுக பொதுக்குழு கூடுகிறது. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க வாய்ப்பு இருப்பாக தெரிகிறது.

கடந்த 2022, ஜூலையில் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்ட தீா்மானங்களை எதிா்த்தும், அதிமுக பொதுச் செயலாளா் தோ்தலை எதிா்த்தும், அதிமுகவில் இருந்து நீக்கிய ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளா்கள் தொடர்ந்த வழக்குகள் குறித்தும் ஆலோசனை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக - பாஜக  கூட்டணி முறிந்த பிறகு நடக்கும் பொதுக்குழு என்பதால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக யாருடன் கூட்டணி அமைக்கவுள்ளது என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லாபம் கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தூய்மைப் பணியாளா்களை அரசே நியமிக்க வேண்டும்: நலவாரியத் தலைவா் ஆறுச்சாமி

இடையூறாக நிறுத்தியிருந்த 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குமரியில் கடற்கரைப் பகுதிக்கு செல்லத் தடை

வியாபாரி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு: போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT