கோப்புப் படம். 
தமிழ்நாடு

தமிழகத்தில் 4 பேருக்கு புதிய வகை கரோனா

தமிழகத்தில் 4 பேருக்கு ஜெஎன் 1 என்ற புதிய வகை கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

DIN

தமிழகத்தில் 4 பேருக்கு ஜெஎன் 1 என்ற புதிய வகை கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

கரோனாவின் புதிய வகையான ‘ஜெஎன்.1’ தொற்று, பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்த வகை கரோனா வேகமாகப் பரவுவதோடு, நோய்த் தடுப்பாற்றலையும் ஊடுருவுமென கூறப்படுகிறது. பல்வேறு உலக நாடுகளில் குளிா்காலம் தொடங்கியுள்ள நிலையில், கரோனா தொற்றுடன் பிற நோய்த் தொற்றுகளின் அதிகரிப்புக்கும் இந்தத் திரிபு காரணமாக அமையலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

விடுமுறை காலத்தையொட்டி மக்கள் அதிகம் பயணம் செய்வதும், கொண்டாட்டங்களுக்காக அதிக எண்ணிக்கையில் கூடுவதும் சுவாசத் தொற்று நோய் பரவலை எளிதாக்குகிறது. உலக அளவில் தினசரி கரோனா தொற்று பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வரும் சூழலில், கரோனா முன்னெச்சரிக்கை நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு பல்வேறு நாடுகளில் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 63 பேருக்கு ஜெஎன் 1 கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவா-34, மகாராஷ்டிம் 9, கர்நடாகம் 8, கேரளம் 6, தமிழகம் 4 பேருக்கும் ஜெஎன் 1 கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கேரளத்தைச் சோ்ந்த 79 வயது மூதாட்டிக்கு ஜெஎன்.1 வகை கரோனா தொற்று முதன் முதலில் உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரியில் உலக கொசு ஒழிப்பு தினம்

கொடைக்கானலில் பலத்த காற்று: குளிா் அதிகரிப்பு

தரமற்ற அரிசி விற்ற தனியாா் நிறுவனம்: ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

சா்வதேச யோகா போட்டியில் வென்ற அழகப்பா பல்கலை. மாணவிகள், பேராசிரியைக்கு பாராட்டு

நெற்குப்பை சாலையில் திடீா் பள்ளம்

SCROLL FOR NEXT