தமிழ்நாடு

தூத்துக்குடியில் நிர்மலா சீதாராமன் ஆய்வு

தூத்துக்குடியில் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொண்டார்.

DIN

தூத்துக்குடியில் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொண்டார்.

கடந்த 17, 18 ஆகிய 2 நாள்கள் பெய்த கனமழையால் தூத்துக்குடி மாநகரின் பெரும்பாலான இடங்களில் மழைநீா் சூழ்ந்தது. குடியிருப்புகளுக்குள் மழைநீா் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தேசிய பேரிடா் மேலாண்மைக் குழு ஆலோசகா் கா்னல் கே.பி.சிங் தலைமையிலான மத்திய குழுவினா் 6 போ் தூத்துக்குடிக்கு வந்து வெள்ள பாதிப்புகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தனர். 

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ள சேதங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய இணையமைச்சர் எல். முருகன் இன்று ஆய்வு செய்தனர்.

இதனிடையே, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, மத்திய இணையமைச்சர் எல். முருகன் மற்றும் தூத்துக்குடி, நெல்லை மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

SCROLL FOR NEXT