கோப்புப்படம் 
தமிழ்நாடு

தொகுதிப் பங்கீடு: தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு மேலிடம் அழைப்பு

மக்களவைத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு கட்சி மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.

DIN

மக்களவைத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு கட்சி மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்ட தலைவர்களுக்கு கட்சித் தலைமை அழைப்பு விடுத்துள்ளது. செல்வப்பெருந்தகை, ப.சிதம்பரம், மாணிக்கம் தாகூர், செல்வக்குமார் ஆகியோருக்கு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கூட்டணி நிலவரம், தொகுதிப் பங்கீடு தொடர்பாக  விவாதிக்க தமிழக காங்கிரஸ் குழுவினருக்கு, வரும் 29 மற்றும் 30 ஆம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு காங்கிரஸ் தலைமை அழைப்பு விடுத்துள்ளது.

மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் 10-க்கு மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றிபெறும். திமுக - காங்கிரஸ் கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்று  முன்னதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ். அழகிரி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு... ஆசிய கோப்பையில் தேர்வான இந்திய அணி!

ஒன் வே... அஞ்சனா ரங்கன்!

இந்த வாரம் கலாரசிகன் - 10-08-25

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

“போப்பா..! போ.. போ!” யானையை செல்லமாக காட்டிற்குள் விரட்டிய மக்கள்!

SCROLL FOR NEXT