மதுரை - சண்டீகர் ரயில் 8 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!
இணை ரயில் வருகையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, இந்த நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
மதுரை: மதுரையிலிருந்து புதன்கிழமை இரவு புறப்படவிருந்த மதுரை- சண்டிகர் விரைவு ரயில் 8 மணி நேரம் தாமதமாக வியாழக்கிழமை (டிச. 28) காலை புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மதுரை ரயில் நிலையத்திலிருந்து புதன்கிழமை (டிச. 27) இரவு 11.35 மணிக்குப் புறப்படவிருந்த மதுரை - சண்டீகர் விரைவு ரயில் (12687), ஏறத்தாழ 8.40 மணி நேரம் தாமதமாக வியாழக்கிழமை காலை 7.15 மணிக்குப் புறப்படும்.
Advertisement
Advertisement
இணை ரயில் வருகையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, இந்த நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.