சிறுத்தை தாக்கி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சரிதா 
தமிழ்நாடு

சிறுத்தை தாக்கி சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு

நீலகிரி பந்தலூர் பகுதியில் சிறுத்தை தாக்கி சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார்.

DIN



நீலகிரி பந்தலூர் பகுதியில் சிறுத்தை தாக்கி சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் வட்டத்தில் பத்து நாள்களுக்கு முன்பு சிறுத்தை தாக்கியதில் சரிதா என்ற பெண்ணை படுகாயம் அடைந்தார்.

இவரது அலறல் சப்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்தவா்கள் ஓடி வந்தனா். ஆள்கள் வருவதைப் பாா்த்ததும் சிறுத்தை அங்கிருந்து ஓடிவிட்டது.

உடனடியாக சரிதாவை மீட்டு பந்தலூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு முதலுதவிக்குப் பின் சாரிதா மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இதனிடையே, மேல் சிகிச்சைக்காக புதன்கிழமை சரிதாவை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி  வெள்ளிக்கிழமை (டிச.29) காலை சரிதா உயிரிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

சூர்ய நிலவு... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT