முகப்பு
தமிழ்நாடு

விஜயகாந்த் இறுதிச்சடங்கில் முதல்வர் ஸ்டாலின்!

நடிகரும் தேமுதிக தலைவருமான நடிகர் விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

Updated On : 29 டிசம்பர், 2023 at 7:00 PM
பகிர்:

நடிகரும் தேமுதிக தலைவருமான நடிகர் விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

தீவுத்திடலில் புறப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம் கோயம்பேடு தேமுதிக அலுவலகம் வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் தொண்டர்கள், உறவினர்கள், ரசிகர்கள் பங்கேற்றனர்.

விஜயகாந்த்தின் இறுதிச்சடங்கில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் 200 பேருக்கு மட்டுமே அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

விஜயகாந்த்தின் இறுதிச்சடங்கில் தமிழக அரசு சார்பில்  முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுள்ளனர். 72 குண்டுகள் முழங்க விஜயகாந்த் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.