முகப்பு
தமிழ்நாடு

தென் மாவட்ட வெள்ள நிவாரணப் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த ஆணை

அரசின் நிவாரண உதவிகள் 100 சதவீதம் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறவுறுத்தியுள்ளார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
பகிர்:

அரசின் நிவாரண உதவிகள் 100 சதவீதம் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறவுறுத்தியுள்ளார்.

அதிகனமழையாலும் - வெள்ளப்பெருக்காலும் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி - திருநெல்வேலி - கன்னியாகுமரி - தென்காசி மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. 

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் - தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்ற நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் - மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் தற்போதைய கள நிலவரத்துக்கு ஏற்ப பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய முதல்வர், அரசின் நிவாரண உதவிகள் 100 சதவீதம் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்ய அறிவுறுத்தினார்.

முழு கட்டுரையைப் படிக்க →