தமிழ்நாடு

நடிகர் விஜய் நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு: 6 பேர் காயம்

நெல்லையில் நடிகர் விஜய் நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் 2 பெண்கள் உள்பட 6 பேர் காயமடைந்தனர். 

DIN

நெல்லையில் நடிகர் விஜய் நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் 2 பெண்கள் உள்பட 6 பேர் காயமடைந்தனர். 

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் கடந்த 17, 18 ஆகிய இரு தினங்கள் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, தாமிரவருணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏராளமான கண்மாய், குளங்கள் நிரம்பியதால், உடைப்பு ஏற்பட்டு குடியிருப்புகளுக்குள் தண்ணீா் புகுந்தது.

பல இடங்களில் சாலைகள், பாலங்கள் உடைந்ததால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

வெள்ளப் பாதிப்பால் தென் மாவட்ட மக்கள் வாழ்வாதாரங்களை இழந்தனா். மேலும் வீடுகள், தொழில் சாலைகளில் தண்ணீா் புகுந்ததால் அனைத்துப் பொருள்களும் சேதமடைந்தன. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நெல்லை கேடிசி நகரில் உள்ள மாதா மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 1500-க்கும் மேற்பட்டோருக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை விஜய் வழங்கினார்.

மேலும், வீடுகளை இழந்த வள்ளி என்பவருக்கு ரூ.50 ஆயிரம், இசக்கி என்பவருக்கு ரூ.50 ஆயிரம், சங்கரன் என்பவருக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் வீடுகள் சேதம் அடைந்த 30 பேருக்கு தலா ரூ.25 ஆயிரத்தை வழங்கினார். தொடர்ந்து 2,500 பேருக்கு வடை, பாயாசத்துடன் அறுசுவை விருந்தும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் நெல்லையில் நடிகர் விஜய் நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் 2 பெண்கள் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.

நிகழ்ச்சி முடிந்த பின் விஜய் புறப்பட்டபோது அவரை காண முயன்றதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு 6 பேர் காயமடைந்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

SCROLL FOR NEXT