மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,154 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,154 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 103.71அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1072கன அடியிலிருந்து 1154கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.73 டி.எம்.சியாக உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.