கோப்புப்படம் 
தமிழ்நாடு

பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3-ம் புயல் எச்சரிக்கை கூண்டு!

பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இன்று காலை ஏற்றப்பட்டது.

DIN

தூத்துக்குடி: பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இன்று காலை ஏற்றப்பட்டது.

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுமண்டலம் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரை பகுதிகளை இன்று காலை முதல் கடக்க கூடும். இதனால், இலங்கை மற்றும் தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சுமார் 55 கி.மீட்டர் வேகத்தில் புயல்காற்று வீசக்கூடும். மேலும் தூத்துக்குடி உள்ளிட்ட தென் கடலோர மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு தெரியப்படுத்தும் வகையிலும், வஉசி துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு இன்று ஏற்றப்பட்டுள்ளது.

அதேபோல், பாம்பன் துறைமுகத்திலும் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இன்று காலை ஏற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

சுதந்திர இந்தியாவின் 100 -வது வயதிலும் மோடி பணியாற்ற வேண்டும்! முகேஷ் அம்பானி

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

SCROLL FOR NEXT