ஓ.பன்னீர்செல்வம் / அண்ணாமலை 
தமிழ்நாடு

ஓபிஎஸ் வேட்பாளரை திரும்பப்பெற வேண்டும்: அண்ணாமலை

ஈரோடு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தனது வேட்பாளரை திரும்பப் பெற வேண்டும் என அவரிடம் (ஓபிஎஸ்) கோரிக்கை வைத்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

DIN


ஈரோடு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தனது வேட்பாளரை திரும்பப் பெற வேண்டும் என அவரிடம் (ஓபிஎஸ்) கோரிக்கை வைத்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக பிரிந்து இரு அணிகளாக போட்டியிட்டால், வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்கும்.

இது தொடர்பாக தொலைபேசி வாயிலாக ஓ.பன்னீர்செல்வத்திடம் உரையாடினேன். நேற்று நேரில் சென்றும் அவரைச் சந்தித்து பேசினேன்.

ஓ.பன்னீர் செல்வம் வேட்பாளரை விட எடப்பாடி பழனிசாமி வேட்பாளருக்கு உள்ளூரில் அதிக செல்வாக்கு உள்ளது. அதனால், ஓபிஎஸ் தனது வேட்பாளர் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். இபிஎஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அவரிடம் (ஓபிஎஸ்) கோரிக்கை வைத்துள்ளேன். 

உள்கட்சி பிரச்னையில் நாங்கள் தலையிட முடியாது. அதிமுக சார்பில் ஒரு வேட்பாளரை இரட்டை இலை சின்னத்தில் நிற்கவைத்தால், பாஜக முழுமையாக களப்பணி செய்து வெற்றிபெற உழைக்கத்தயார்.  

எங்கள் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளதால், நல்ல முடிவு இன்று மாலைக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்'' எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தான்: வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பிய எக்ஸ்பிரஸ் ரயில்

நாகையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

மனோதைரியம் கூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

SCROLL FOR NEXT