தமிழ்நாடு

சொந்த மக்களை அரசே சுரண்டக்கூடாது: சென்னை உயர் நீதிமன்றம்

DIN


சென்னை: சொந்த மக்களை அரசே சுரண்டக் கூடாது. அரசு ஒரு முன்மாதிரி முதலாளியாக செயல்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் ஓட்டுநர்களாக நியமிக்கக் கோரி தூய்மை பணியாளர்கள் ஜெயபால், மாரிமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த கருத்தைப் பதிவு செய்துள்ளது.

தூய்மைப் பணியாளர்களை அதிக வருமானம் உள்ள ஓட்டுநராகப் பயன்படுத்தியது, சொந்த மக்களை அரசே சுரண்டுவதற்கு ஒப்பானது. அரசு என்பது ஒரு முன்மாதிரி முதலாளியாக செயல்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஜெயபால் மற்றும் மாரிமுத்து ஆகியோர் தொடர்ந்த மனுவில், கல்வித் தகுதியை காரணம் காட்டி தங்களை ஓட்டுநராக நியமிக்க அரசு மறுப்பதாகவும், கோவை மாநகராட்சி, குறைந்த ஊதியம் உள்ள தூய்மைப் பணியாளர்களான தங்களை ஓட்டுநர்களாகப் பயன்படுத்திவிட்டு, கல்வித் தகுதியை காரணம் காட்டி ஓட்டுநர்களாக நியமிக்க அரசு மறுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உணவு பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

வேட்டமங்கலத்தில் மாநில கையுந்துப் பந்து போட்டி

ஸ்ரீவிக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியின் வேலைவாய்ப்பு முகாம்: 282 போ் தோ்வு

பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளில் நிறுவனா் தின விழா

தெற்கு ஆத்தூரில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT